Home
You Are Here: Home » News » Karnataka » காவிரி பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை – சித்தராமையா

காவிரி பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை – சித்தராமையா

காவிரி பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து‌ள்ளார்.

இது குறித்து பெங்களூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகாவின் உரிமையை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்று‌ம், நமது மாநிலத்திற்கு எதிராக தமிழகம் உள்பட யார் நெருக்கடி கொடுத்தாலும், சட்டத்தின் மூலம் அதை முறிடிப்போம் என்று‌ம் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா எப்போதெல்லாம் தமிழக முதல்வராக பதவியில் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் காவிரி விஷயத்தில் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி இருமாநில உறவை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக சித்தாரமையாக குற்றம்சாட்டினார்.

நாம் திறந்த மனதுடன் செயல்பட்டாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா நமக்கு எதிராக செயல்படுவதுடன், காவிரி பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில் நாடகமாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நினைத்தாலும் தமிழக அரசு அதற்கு தயாராக இல்லை என்று‌ம் சித்தராமையா கூறினார்

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top