Home
You Are Here: Home » News » India » ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இந்தியா வருகை

ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இந்தியா வருகை

இருநாட்கள் பயணமாக ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று இந்தியா வருகிறார்.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று இந்தியா வருகிறார். இருதரப்பு உறவை மேம்படுத்தும் விதமாக முதலில் அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கூடங்குளம் அணு உலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திரமோடியை, டிமித்ரி ஓ ரோகோசின் சந்திக்க உள்ளார். பின்னர், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top