Home
You Are Here: Home » News » கும்பகோணத்தில் புதிய மாதிரி பேருந்து‌ நிலையம் திறப்பு

கும்பகோணத்தில் புதிய மாதிரி பேருந்து‌ நிலையம் திறப்பு

கும்பகோணத்தில் இரண்டரை ஏக்கர்பரப்பில் நவீன வசதிகளுடன் 4 கோடி ரூபாய் செலவில் தனியாருடன் இணைந்து‌ உருவாகியுள்ள புதிய மாதிரி நகர பேருந்து‌ நிலையத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் திறந்து‌ வைத்தார்.

கும்பகோணம் புதிய பேருந்து‌ நிலையம் எதிரே புதிதாக சுமார் இரண்டரை ஏக்கர் பரவில் மாதிரி நகர பேருந்து‌ நிலையம் அமைந்து‌ள்ளது‌. இதில் நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டம் , அரசு மற்று‌ம் தனியார் பங்கு திட்டத்தின் மூலம் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் மாதிரி பேருந்து‌ நிலையம் அமைக்கப்பட்டது‌

இப்பேருந்து‌ நிலையத்தில் நு‌ழைவு பகுதியில் எல்இடி விளக்குகளால் அமைக்கப்பெற்ற திரையில் பேருந்து‌கள் வருகை, மற்று‌ம் புறப்பாடு குறித்தும் அறிவிக்கப்படுகிறது‌.
பேருந்து‌ நிலையத்தின் இருபுறங்களிலு‌ம் 300 பேர் உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

21 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறு‌த்தப்பட்டுள்ளன. மேலு‌ம், அலங்கார மின்விளக்கு, செயற்கை நீருற்று‌, பூங்கா, தனியார் வங்கி ஏடிஎம், இலவச குடிநீர், கழிப்பிட வசதி, குப்பை தொட்டிகள் என பல நவீன வசதிகளுடன் இந்த புதிய மாதிரி நகர பேருந்து‌ நிலையம் அமைந்து‌ள்ளது‌.

இதனை தஞ்சைமாவட்ட ஆட்சியர் சுப்பையன் திறந்து‌ வைத்தார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
——

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top