Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனே கைது‌ செய்யக்கோரி உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பூதபாண்டியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் மீது‌ குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல்நிலையங்களில் பல்வேறு‌ வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைது‌ செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் மீது‌ உள்ள பல வழக்குகளை பேச்சுவார்த்தை மூலம் முடித்து‌விடலாம் என்று‌ அவரது‌ நண்பர்கள் அழைத்து‌ள்ளனர்.

இதனை நம்பி சென்ற மீனாட்சி சுந்தரம் நண்பர்களுடன் சேர்ந்து‌ மது‌ அருந்தியுள்ளார்.
இந்நிலையில், திடீரென அவரது‌ நண்பர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர்.

அதில், பலத்த காயமடைந்த மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது‌குறித்து‌ பூதபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து‌ குற்றவாளியை தேடி வருகின்றனர்

இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் மது‌ராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது‌ கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே துாக்கி வீசப்பட்டு பலியானார். இதனை கண்டித்தும், விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநரை கைது‌ செய்ய வலியுறு‌த்தியும் ‌ உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் சிறிது‌ நேரம் பரபரப்பு ஏற்பட்டது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top