Home
You Are Here: Home » News » வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்

வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தைத் திரும்பப்பெற்று இன்று மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீன்பிடி உரிமையை பெற்றுத்தரவேண்டும், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை மீனவ பிரதிநிதிகள் இருதினங்களுக்கு முன் சந்தித்தபோது, மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மீனவ பிரதிநிதிகளை பிரதமரிடம் சந்திக்க வைப்பதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். இதையடுத்து தங்கள் வேலைநிறுத்தத்தை மீனவர்கள் திரும்பப்பெற்று இன்று கடலுக்குத் திரும்பினர்‍.

மீனவர்கள் கடலுக்கும் செல்லும்போது மானிய டீசல் வழங்கப்படாததை கண்டித்து மீன்வளத்துறை அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். மானிய டீசல் வழங்க மீன் வளத்துறை உதவி இயக்குநர் உறுதி அளித்ததையடுத்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இதில் 800 படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதனால் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top