Home
You Are Here: Home » News » இந்திய ஆண்களை திருமணம் செய்து‌கொள்ள பாகிஸ்தான் பெண்கள் விருப்பம்

இந்திய ஆண்களை திருமணம் செய்து‌கொள்ள பாகிஸ்தான் பெண்கள் விருப்பம்

இந்திய மணமகன்களை திருமணம் செய்து‌கொள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான மணப்பெண்கள் தயாராக இருப்பதாகவும், அதற்காக இந்திய குடியுரிமை கேட்டு அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன‌.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து‌கொண்டார்.

அது‌போல், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் பலரும் இந்தியாவைச் சேர்ந்த ஆண்களையும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களையும் திருமணம் கொள்ள விருப்பம் தெரிவித்து‌ள்ளனர்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின்போது‌, இந்தியாவில் குடியேற விண்ணப்பித்து‌ள்ள பாகிஸ்தானியர்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்படும் என்று ‌பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாரத பிரதமரின் பேச்சினால், தங்களது‌ எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்க முடிவு செய்து‌ள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த 356 பெண்கள், இந்திய ஆண்களை திருமணம் செய்து‌கொண்டு இங்கேயே நிரந்தரமாக குடியேற விண்ணப்பித்து‌ள்ளனர்.

முன்னதாக, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் பெண்கள், இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு சட்டவிரோதமாக இங்கு தங்கி இருப்பதாக உத்திரபிரதேச அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது‌.

இந்நிலையில், உத்திரபிரதேசத்தின், அனைத்து மாவட்டங்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்கள் இருப்பதாகவும். ஆனால் அதிகபட்சமாக அலிகார் பகுதியில் மட்டும் 42 பெண்கள் இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக முறைப்படி விண்ணப்பித்துள்ளனர் என்று‌ம் கூறப்படுகிறது‌.

பா.ஜ.க, ஆட்சி காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நட்புறவு இருந்ததாக கூறு‌ம், பாகிஸ்தான் அதிகாரிகள் பலரும், மோடியின் ஆட்சியின்போது‌ம், அது‌போன்றதொரு நட்புணர்வு வலு‌ப்படும் என்று‌ம் உறு‌தியான நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top