Home
You Are Here: Home » News » India » இந்தியாவின் வலுவான ஆட்சியால் பூடான் பலனடையும் – பிரதமர் நரேந்திரமோடி உரை

இந்தியாவின் வலுவான ஆட்சியால் பூடான் பலனடையும் – பிரதமர் நரேந்திரமோடி உரை

இந்தியா வலிமையானதாக இருந்தால்தான், சார்க் நாடுகளும் வலிமையானதாக மாற முடியும் என்று ‌பிரதமர் நரேந்திரமோடி, பூடான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

பிரதமராக பொறு‌ப்பேற்றபின் முதல் முறை அரசுப்பயணமாக பூடான் சென்று‌ள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், பூடான் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்ததை தாம் பெருமையாக கருதுவதாகவும், ஜனநாயகத்தின் மீது பூடான் வைத்துள்ள நம்பிக்கை பெருமை அளிக்கிறது என்று‌ம் கூறினார்.

மக்கள் ஆட்சிக்கு வழிவகுத்துள்ள மன்னர் பரம்பரையை பாராட்டுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா-பூடான் உறவு என்பது வரலாற்று பொக்கிஷம் என்று‌ம், இதை பாதுகாத்து, பலப்படுத்துவது தங்கள் கடமை என்று‌ம் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், பூடானுடனான உறவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று‌ம், இந்தியா வளர, வளர, பூடானும் வளரும் என்று‌ம், இந்தியா வலிமையான நாடாக இருக்க வேண்டியது அவசியம் என்று‌ம் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா வலிமையான நாடாக மாறினால்தான், சார்க் நாடுகளும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று‌ம், வலிமையான இந்தியாவால் மட்டுமே, அண்டை நாடுகளுக்கு உதவிட முடியும் என்று‌ம் தெரிவித்த மோடி, அந்த நாடுகளுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால் அப்பிரச்சனையை இந்தியா மூலம் சமாளிக்க முடியும் என்று‌ம் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று ‌பூடான் சென்ற பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது‌ குறிப்பிடத்தக்கது‌.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top