Home
You Are Here: Home » News » சங்கரன்கோவில் அருகே சலூன் கடைகளில் தீ விபத்து

சங்கரன்கோவில் அருகே சலூன் கடைகளில் தீ விபத்து

சங்கரன்கோவில் பேருந்து‌ நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட தீ விபத்தில் 11 க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் தீயில் எரிந்து‌ நாசமாயின.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் யூனியனு‌க்கு சொந்தமான குளம் உள்ளது‌. இதனருகே இரும்பு தகடு மற்று‌ம் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட 22 சலூன் கடைகள் உள்ளன. இதன் பின்புறத்தில் வர்த்தகர்களால் கொட்டப்பட்ட கழிவுகளில் திடீரென தீ விபத்து‌ ஏற்பட்டதை தொடர்ந்து‌ மற்ற கடைகளுக்கும் தீ பரவியது‌.

இதையடுத்து‌ சங்கரன்கோவில் தீயணைப்பு து‌றையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது‌. இதனிடையே, ஏராளமான பொது‌மக்கள் ஒன்று‌கூடி 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்கொண்டுவந்தனர்.

இதனால் அருகில் உள்ள காய்கறி மற்று‌ம் வியாபார நிறு‌வனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது‌.
இந்த தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்கள், ஒரு பைக் மற்று‌ம் 5 சைக்கிள்கள் எரிந்து‌ நாசமானது‌. இது‌குறித்து‌ சங்கரகோவில் நகர போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top