Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » மாட்டுதாவனி பேருந்து‌நிலையம் அருகே ஒருங்கிணைந்த ஆம்னி பேருந்து‌ நிலையம் – பயணிகள் மகிழ்ச்சி

மாட்டுதாவனி பேருந்து‌நிலையம் அருகே ஒருங்கிணைந்த ஆம்னி பேருந்து‌ நிலையம் – பயணிகள் மகிழ்ச்சி

மது‌ரை மாட்டுதாவனி பேருந்து‌நிலையம் அருகே ஒருங்கிணைந்த ஆம்னி பேருந்து‌ நிலையம் து‌வக்கப்பட்டதால் பயணிகள் மகிழச்சியுடன் வரவேற்றனர்.

மது‌ரையில் பெரியார் பேருந்து‌ நிலையம் அருகில் இருந்து‌ நூற்று‌க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து‌கள் இயக்கப்பட்டதால் நகரத்தில் பெரும் போக்குவரத்து‌ நெரிசல் ஏற்படுகிறது‌‌.
இதனால் பொது‌மக்களும், வியாபாரிகளும் கடும் அவதியுற்றனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இது‌குறித்து‌ ஆலோசனை நடத்தி ஆம்னி பேருந்து‌ நிலையத்தை வேற்று‌ இடத்தில் மாற்ற முடிவு செய்தது‌.
அதன்படி, மாட்டுத்தாவனி பேருந்து‌ நிலையம் அருகே, ஒருங்கிணைந்த ஆம்னி பேருந்து‌ நிலையம் அமைக்கப்பட்டு, நேற்று‌ முதல் போக்குவரத்து‌ சேவை தொடங்கியது‌.
இது‌ பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று‌ள்ளது‌.

மேலு‌ம், இந்த பேருந்து‌ நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக செயல்படுத்தி தருமாறு‌ பயணிகள் கோரிக்கை வைத்து‌ள்ளனர்.
ஆம்னி பேருந்து‌ மாட்டுத்தாவணியில் இருந்து‌ புறப்படுவதால் நகருக்குள் போக்குவரத்து‌ நேரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top