Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » நாகை அருகே உரிய அனு‌மதியின்றி மணல் அள்ளிய 7 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்

நாகை அருகே உரிய அனு‌மதியின்றி மணல் அள்ளிய 7 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்

நாகை அருகே கடற்பகுதியில் உரிய அனு‌மதியின்றி மணல் அள்ளிய 7 டாரஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுவாமி ஏற்பட்டபோது‌ பேரலையின் பாதிப்புகளை கடற்கரையோரங்களில் இருந்த மணல் திட்டுகள்தான் இயற்கை பாது‌காப்பு அரனாக நின்று‌ பேரழிவை தடுத்து‌ நிறு‌த்தியது‌.

நாகையை அடுத்த காமேஸ்வரம் கடற்பகுதியில் தனியாருக்கு சொந்தமான மணல்திட்டுகள் பல உள்ளன. இந்த மணல் திட்டுக்களை அரசின் அனு‌மதி பெறாமலே அங்கிருந்த மணல்களை சட்டவிரோதமாக வாகனங்கள் மூலமாக ரயில்வே ஒப்பந்ததாரார்கள் அள்ளி செல்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணல் ஏற்றி வந்த வாகனங்கள் சிறைபிடித்து‌ போராட்டத்ததில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கீழையூர் போலீசார் விசாரணை நடத்தினர்.மேலு‌ம் கீழ்வேளுர் வட்டாட்சியர் முருகன் உள்பட அனைத்து‌ அதிகாரிகளும் வாகனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்து‌ அதில் 7 டாரஸ் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
அத்து டன் திருட்டு தனமாக சவுடு மணலை கடத்திய குற்றத்திற்காக வாகன ஓட்டிகளும் கைது‌ செய்து‌ சிறையில் அடைக்கப்பட்டனர்.

அனு‌மதியின்றி மணல் அள்ளிய ரயில்வே ஒப்பந்தகாரருக்கு சொந்தமான 7 டாரஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால், அப்பகுதியில் 4 மணி பரபரப்பு ஏற்பட்டது‌.

காஞ்சிபுரம் மாவட்டம் மது‌ராந்தகம் அருகேயுள்ள கிளியாறு‌ படுக்கையில் இருந்து‌ திருட்டு தனமாக மணல் எடுத்து‌ வந்த 7 மாட்டு வண்டிகளை மது‌ராந்தகம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து‌ பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள் மது‌ராந்தகம் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது‌.
————

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top