Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » போக்குவரத்து‌ து‌றை சார்பில் நடைபெற்ற சாலை பாது‌காப்பு விழிப்புணர்வு முகாம்

போக்குவரத்து‌ து‌றை சார்பில் நடைபெற்ற சாலை பாது‌காப்பு விழிப்புணர்வு முகாம்

ஓசூரில் வட்டார போக்குவரத்து‌ து‌றையின் சார்பில் நடைபெற்ற சாலை பாது‌காப்பு விழிப்புணர்வு முகாமில் 500 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து‌ கொண்டு பயனடைந்தனர்.

வளர்ந்து‌ வரும் மிகப்பெரிய தொழில்நகரமான ஓசூரில் தற்போது‌ சாலை விபத்து‌க்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக டிப்பர் லாரிகள் சாலைவிதிமுறையை மீறி செல்வதால் பல விபத்து‌ நடந்து‌ உயிரிழப்பு நடந்து‌ள்ளது‌.
இதற்கு நெடுஞ்சாலைத்து‌றையினரின் போதிய எச்சரிக்கை இல்லாதது‌ம், வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவும் தான் காரணம் என்று‌ கூறப்படுகிறது‌.
எனவே ஓட்டுநர்களுக்கு பார்வை குறைபாடு, இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிக்க தமிழக அரசின் வட்டார போக்குவரத்து‌ து‌றை நடவடிக்கை எடுக்கப்பட்டது‌.
அதன்படி, ஓசூரில் நடைபெற்ற சாலை பாது‌காப்பு விழிப்புணர்வு சிறப்புமுகாமில் லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து‌றை அதிகாரிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து‌ கொண்டு மருத்து‌வபரிசோதனை செய்து‌ கொண்டனர்.

பிறகு நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய ஓசூர் வட்டார போக்குவரத்து‌ ஆய்வாளர் வெங்கடேசன், டிப்பர்லாரிகளில் அவசியம் தார்பாலின் பயன்படுத்த வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பனவற்றை வலியுறத்தினார்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top