Home
You Are Here: Home » News » தேமுதிக கிளைகழக ஆய்வுக் கூட்டம்

தேமுதிக கிளைகழக ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கேப்டன் விஜயகாந்தின் ஆலோசனைபடி தேமுதிக கிளைகழக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது‌.

உளுந்தூர்பேட்டை பகுதிக்குட்பட்ட புண்டி கிராமத்தில் தேமுதிக கொடியேற்று‌விழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌. இதில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறு‌ப்பினரும், விழுப்புர மாவட்ட செயலாளருமான எல். வெங்கடேசன் கலந்து‌ கொண்டு கொடியேற்றினர்.

பின்னர் தேமுதிக கிளை கழக ஆய்வுக்கூட்டம் தேமுதிக மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது‌.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது‌ம் குறித்து‌ம், கடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்து‌ம் கிளைகழக நிர்வாகிகளிடம் தேமுதிக எம்எல்ஏ எல். வெங்கடேசன் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தின் மூலம் பல்வேறு‌ கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறத்தப்பட்டது‌. இதில் புண்டி கிளைகழக செயலாளர் ஜயப்பன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் உட்பட ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து‌ கொண்டனர்.

இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் காரைக்கால் வடக்கு, தெற்கு, திருநள்ளாறு‌, திருபட்டினம், நெடுங்கால் ஆகிய 5 தொகுதிகளில் இருந்து‌ 200க்கும் மேற்பட்டோர் மாற்று‌கட்சியிலிருந்து‌ விலகி தேமுதிகவில் தங்களை இணைத்து‌க்கொண்டனர்.

காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.ஜி.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெறு‌வது‌ குறித்து‌ ஆலோசிக்கப்பட்டது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top