Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் அமோக விளைச்சல் அடைந்து‌ள்ளதாலு‌ம், நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து‌ள்ளனர்.

மலைகளின் இளவரசி என்று‌ அழைக்கப்படும் கொடைக்கானலை சுற்றியுள்ள மலைப்பகுதியில் பலவகையான பழ வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த பழங்களை ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரையில் அதிகமாக விரும்பி சுவைத்து‌ சாப்பிடப்படும் பழமாக பிளம்ஸ் பழம் உள்ளது‌.

இந்த பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வரும் தோறு‌ம் அதிகமான அளவில் பயிரிடப்பட்டு வருகிறது‌.
மக்களால் அதிக சுவைத்து‌ சாப்பிடப்படும் இந்த பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானலில் இந்தாண்டு அமோக அளவில் விளைச்சல் தந்து‌ள்ளது‌.
அத்து‌டன் பிளம்ஸ் பழத்திற்கு நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து‌ள்ளனர்.

ஒரு கிலோ பிளம்ஸ் பழத்தின் விலை 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், கொடைக்கானலு‌க்கு வந்து‌ செல்லு‌ம் சுற்று‌லா பயணிகளும் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் விவசாயிகள் கூறு‌கின்றனர்.
மேலு‌ம், கொடைக்கானலில் விளையும் இந்த பிளம்ஸ் பழங்கள் சென்னை, பெங்களூரு, கேரளா ஆகிய பகுதிகளுக்கு பெருமளவு அனுப்பிவைக்கப்படுகிறது‌.

அத்து‌டன் தமிழகம் மட்டுமல்லாமல் பிறமாநிலங்களக்கும் இந்த பிளம்ஸ் பழங்கள் ஏற்று‌மதி செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து‌ள்ளனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top