Home
You Are Here: Home » News » Andhra Pradesh » மெகா சிட்டியாக மாறும் திருப்பதி

மெகா சிட்டியாக மாறும் திருப்பதி

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, புனித நகரமான திருப்பதியை மெகா சிட்டியாக மாற்றுவதற்கு ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில், சமீபத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான், திருப்பதியை பெருநகரமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகும், திருப்பதி நகரின் மக்கள் தொகை, 4 லட்சத்தை தாண்டியுள்ளதால், நகரை விரிவுப்படுத்த முடிவு செய்யப்படுள்ளது.

மேலும், திருப்பதிக்கு வந்து போகும், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நெடுஞ்சாலைகளை இணைத்து, புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

மேம்பாலம் கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின், பணிகள் துவக்கப்படும்.ஐதராபாத், விசாகப்பட்டினம் போல, திருப்பதியும், ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரம் என்ற, அந்தஸ்த்தை பெற உள்ளது.

திருப்பதி பெருநகரமாக மாற்றப்படும் போது, அதைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் நகராட்சியுடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top