Home
You Are Here: Home » News » உக்ரைன் ராணுவ விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் ராணுவ விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் ஒன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி தகர்த்தனர். இதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

உக்கரைன் நாட்டில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையோன பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக கிழக்கு உக்ரைன் பகுதியில் அந்நாட்டின் ராணுவ விமானம் ஒன்றை ரஷ்ய பிரிவினைவாத இயக்கத்தினர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி தகர்த்தினர். இதில் அந்த விமானத்தில் பயணம செய்த விமானிகள் உள்பட 49 பேர் கொல்லப்பட்டனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கோதுமை வயலில் உருக்குலைந்து சிதறிக்கிடக்கிறது. இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் பெட்ரோ பிரான்ஸ்கோ கூறுகையில், லுகன்ஸ்க் நகரில் தரையிறங்க முயன்றபோது கலவரக்காரர்கள் அதை ஏவுகணை மூலம் தகர்த்தாகவும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top