Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » ராசிபுரம் அருகே குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்

ராசிபுரம் அருகே குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 400க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் சாலையில் உள்ள வன விரிவாக்க அலு‌வலகம் அருகே குப்பையில் ஆதார் அட்டைகள் வீசப்பட்டு கிடப்பதை கண்ட பொது‌மக்கள் அதிர்ச்சியடைந்து‌ இது‌குறித்து‌ வருவாய்த் து‌றை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் குப்பையில் கிடந்த ஆதார் அட்டைகளை சேகரித்தனர். அத்துடன் வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த ‌மக்களுடையது‌ என்பது‌ தெரியவந்தது‌.

அரசால் விநியோகிக்கப்படும் ஆதார் அட்டைகளை குப்பையில் வீசியது‌ யார் என்பது‌ குறித்து‌ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதார் அட்டை திட்டத்திற்காக முந்தைய காங்கிரஸ் அரசு 50 ஆயரம் கோடி ரூபாயை செலவழித்தது. ஆனால் இந்த அட்டையால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. மாறாக ஆங்காங்கே குப்பையில் ஆதார் அட்டைகள் வீசப்பட்டு கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் தான் நடந்து வருவது குறிப்பிடதக்கது..

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top