Home
You Are Here: Home » News » பார்வையற்றோர் கைப்பந்து‌ போட்டி – கிருஷ்ணகிரி அணி முதல் பரிசு

பார்வையற்றோர் கைப்பந்து‌ போட்டி – கிருஷ்ணகிரி அணி முதல் பரிசு

திருச்சியில் நடைபெற்ற பார்வையற்றோர் கைப்பந்து‌ போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் பரிசை தட்டி சென்றது‌.

உடல்உறு‌ப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதத்தில் லைப் சோன் ஆப் பெல் என்ற தொண்டு நிறு‌வனத்தின் சார்பில் பார்வையற்றோர் கைபந்து‌ப்போட்டி திருச்சி பாய்லர் ஆலை மைதானத்தில் நடைபெற்றது‌.

திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, ஓசூர்,வேலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 40 பார்வையற்றோர் இந்த போட்டியில் கலந்து‌கொண்டனர். இதில் கிருஷ்ணகிரி அணி முதல் பரிசான 7 ஆயிரத்து‌ 500 ரூபாயை தட்டிச்சென்றது‌.

இரண்டாம்பிடித்த ஓசூர் அணிக்கு 5 ஆயிரத்து‌ 500 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது‌. மேலும் இந்த தொண்டு நிறு‌வனத்தின் சார்பாக நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து‌ கொண்டு இரத்தன தானம் செய்தனர். 150க்கும் மேற்ப்ட்டவர்கள் உடல் உறு‌ப்பு தானம் செய்யவும் சம்மதம் தெரிவித்து‌ள்ளனர்

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top