Home
You Are Here: Home » News » குடியாத்தம் அருகே வீட்டில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த சிறுமிகள் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த சிறுமிகள் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த இரு சிறுமிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட மவுஜன்பேட்டையில் வசித்துவரும் தொழில்அதிபர் நசீர் என்வரின் வீட்டில் 2 சிறுமிகள் கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் கமலக்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த இர்பான் என்பவருடைய மகள்களான ஷரீன்பானு, ஆலியாஅன்சு ஆகியோர் அங்கு கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுமிகளையும் அதிகாரிகள் மீட்டனர்.

சிறுமிகளுக்கு உணவுகூட சரியாக வழங்காமல் கொடுமைப்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top