Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » ஏ.டி.எம் காவலாளி கழுத்தறுத்து கொலை

ஏ.டி.எம் காவலாளி கழுத்தறுத்து கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம். மைய கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கழுத்தறுத்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் கிருஷணன்காரணை பகுதியில் அமந்துள்ளது தனியார் வங்கியின் ஏடிஎம் மையம்‍. இதில் கடந்த மூன்று வருடங்களாக முருகன் என்பவர் காவலாளியாக இருந்து வந்தார்‍.இந்நிலையில் அந்த ஏ.டி.எம் மையத்தில் நள்ளிரவில் நுழைந்த சில மர்மநபர்கள் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்‍.

இதைக்கண்டு சத்தமிட்ட காவலாளியை அந்த மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த வெல்டிங் கருவியால் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் இரவு நேர ரோந்தில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வருவதை அறிந்த அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நள்ளிரவில் ஏடிஎம் மைய காவலாளி நள்ளிரவில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top