Home
You Are Here: Home » News » ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசு தீர்மானம்

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசு தீர்மானம்

மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்தாக உலக நாடுகள் குற்றம்சாட்டின.

இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

அதன்படி இலங்கையை எச்சரித்த ஐ.நா. மனித உரிமை ஆணையம், போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சர்வதேச விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறு‌த்த இலங்கை ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் அந்த நாடு ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஐ.நா. அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்துவது, நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top