Home
You Are Here: Home » News » மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்..

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழக மீனவர்கள் தாக்குதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், பிடிபட்ட விசைபடகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அவர்களிடம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” என்று பொன் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அத்துடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், அதனால் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் அவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top