Home
You Are Here: Home » News » India » பூட்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பூட்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் சென்ற நரேந்திர மோடிக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடான பூடானில், அண்மைக் காலமாக சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முழுவீச்சில் முயற்சி செய்துவருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக இன்று பூடானுக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுகொண்டார்

இன்றும் நாளையும் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, பூடான் மன்னர் நம்கியெல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷிரிங் டாப்கேவைச் சந்தித்து, இரு நாடுகளின் உறவு, வர்த்தகம், நீர் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாரத்தை நடத்துகிறார்…

மேலும், பூடான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் விருப்பதுடன், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரையும் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் பூட்டான் சென்றுள்ளனர்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top