Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » கோவை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த புலி்த்தோல்கள் பறிமுதல் – 4 பேர் கைது

கோவை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த புலி்த்தோல்கள் பறிமுதல் – 4 பேர் கைது

கோவை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புலி்த்தோல்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 4பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புலித்தோல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமைியலான வனத்துறையினர் கருமத்தம்பட்டியில் உள்ள பிருந்தாவன் நகரில் உள்ள வீட்டில் சோதனையி்ட்டனர் இந்த சோதனையில் வீட்டுக்கள் புலி்த்தோல்கள் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புலித்தோல்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். புலித்தோல்களை பதுக்கி வைத்தது தொடர்பாக கருமத்தம்பட்டியை சேர்ந்த மணிசேகரன், ராதாகிருஷ்ணன் மற்றும் பொறியல் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ்குமார். திருவிக்னேஷ் ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட புலி்த்தோல்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கைதான நான்கு பேரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரம் ஒன்றிலிருந்து புலித்தோல்களை திருடிவந்ததாக தெரிவித்தனர். பின்னர் 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top