Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » சோழவந்தான் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லஞ்சம் – பொதுமக்கள் முற்றுகை

சோழவந்தான் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லஞ்சம் – பொதுமக்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்கியதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை அடுத்த சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் பிச்சையம்மாளின் மகள் லட்சுமி என்ற சிறுமி வயிற்றுப்போக்கு காரணமாக நேற்று சோழவந்தான் அரசு மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு லஞ்சம் கேட்டதாகவும், சிறுமியின் பெற்றோர் பணம் தர மறுத்ததால் அந்த செவிலியர் குளுக்கோஸ் ஊசியை கையிலிருந்து அகற்றி விட்டதாகவும கூறப்படுகிறது. இதுபோல உள்நோயாளிகளாக வரும் அனைவரிடமும் ஊசி போட 30 ரூபாயும், குளுக்கோஸ் ஏற்ற 100 ரூபாயும் வசூலி்த்தாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், பெண்குழந்தை பிற்நதால் 300ரூபாயும் தரவேண்டும் என தடாலடியாக வசூலித்ததாகவும் தெரிகிறது.

மருத்துவமனையில் நடந்து வந்த இந்த லஞ்ச லாவண்யத்தை கண்டித்து இப்பகுதி மக்கள் நேற்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top