Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » கிருஷ்ணகிரியில் 22வது அகிலஇந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது

கிருஷ்ணகிரியில் 22வது அகிலஇந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது

கிருஷ்ணகிரியில் 22வது அகிலஇந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியின் நுழைவுவாயில் அருகே மாங்கனிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.

முக்கனிகளில் முதல்கனியான மாங்கனி சாகுபடியில் பெயர்போன மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாகும். இதனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன்மாதம் இங்கு அகில இந்திய அளவில் மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 22வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த கொண்டுவரப்பட்ட குதாதத், சிந்து, ஜகாங்கீர், மல்லிகா, ரத்னா அல்போன்சா செந்தூரா உள்ளிட்ட பல்வேறு மாம்பழங்கள் அரங்குகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நுழைவு வாயில் அருகே மாங்கனிகளால் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாங்கனி கண்காட்சி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், கண்காட்சியை முன்னிட்டு தமிழக சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை ஆகியவை சார்பில் அனைத்து மாநில கலாச்சார நிகழ்ச்சிகளும் கொழுகொழு குழந்தைப்போட்டி, நாய்கள் கண்காட்சி, பட்டிமன்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் தினமும் நடத்தப்படுகின்றன.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top