Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளுக்கு நிவாரண உதவி வழங்க தேமுதிக எம்.எல்.ஏ வலியுறுத்தல்

சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளுக்கு நிவாரண உதவி வழங்க தேமுதிக எம்.எல்.ஏ வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளுக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

கடந்த 11ம் தேதி இரவு பொள்ளாச்சி தனியார் விடுதியில் இரண்டு சிறுமிகள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கோவை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளரும், சூளூர் சட்டமன்ற உறுப்பினரமான பனப்பட்டி தினகரன் மற்றும் கழக, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற பாதுகாப்பற்ற விடுதிகள் அனுமதியில்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இவ்விடுதிகளில் தங்கும் மாணவ-மாணவியர்க்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் புகார் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி போதுமானது அல்ல என்று தெரிவித்த அவர், அரசு சார்பில் நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்விவகாரத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் தேமுதிக எம்எல்ஏ தினகரன் தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top