Home
You Are Here: Home » News » மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 4 நாளாக நடந்து வந்த போராட்டத்தை வாழ்வாதாரம் கருதி கைவிட்டனர் மீனவர்கள்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மீனவர்களுக்கு சொந்தமான 24 விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும் ராமேஸ்வரத்தில் கடந்த 9-ம் தேதி முதல் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினத்திலும் வீடுகள், தெருக்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நடைபெற்றது‌.

இந்நிலையில்‌, தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்காவது‌ நாளான இன்று‌ புது‌க்கோட்டை ஜெகதப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறு‌த்தத்தை கைவிட்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top