Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » தருமபுரியில் 144 தடை உத்தரவு விவகாரம்

தருமபுரியில் 144 தடை உத்தரவு விவகாரம்

தருமபுரி மாவட்டத்தில் அமலில் இருக்கும் 144 தடை உத்தரவை திரும்ப பெறாவிட்டால் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரிக்க 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தருமபுரியை அடுத்த அரியகுளம் என்ற கிராமத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பக்கத்து கிராமமான நாயக்கன்கொட்டாய் கிரமாத்தில் கடந்த நவம்பர் மாதம் 7 ம் தேதி காதல் கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை அடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தருமபுரி பகுதியில் விவசாயம் முற்றிலும் முடங்கி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்‍.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை, பொங்கல் பண்டிக்கைகாக குறைந்த பட்சம் ஜாமினிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்‍. 144 தடை உத்தரவை திரும்ப பெற மறுத்தால், வீடுகள் தொறும் கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துனர்‍.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top