Home
You Are Here: Home » News » இந்திய ஹாக்கி அணி சிறந்து விளங்க உள்நாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படவேண்டும் – தன்ராஜ் பிள்ளை

இந்திய ஹாக்கி அணி சிறந்து விளங்க உள்நாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படவேண்டும் – தன்ராஜ் பிள்ளை

இந்திய ஹாக்கி அணி சிறந்து விளங்கவேண்டுமானால், உள்நாட்டு பயிற்சியாளரை நியமிக்கப்படவேண்டும் என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தன்ராஜ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஹாக்கி அகாடமி துவக்க விழா நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் தன்ராஜ்பிள்ளை கலந்துகொண்டு ஹாக்கி அகாடமியை துவக்கி வைத்தார். அப்போது பேசிய தன்ராஜ்பிள்ளை, இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டு பயிற்சியை மாணவ மாணவிகள் பள்ளி பருவத்திலேயே துவங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தன்ராஜ்பிள்ளை தற்போது இந்திய ஹாக்கி அணியின் பின்னடைவுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களே காரணம் என்றும், உள்நாட்டு பயிற்சியாளர்களை நியமித்தால்தான் இந்திய ஹாக்கி அணி சிறந்து விளங்கமுடியும் என்றும் தெரிவித்தார்.

திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழக அளவிலான இரண்டாவது தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியும், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியிம் நடைபெற்றது. இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், பரிசுகேடயமும் வழங்கப்பட உள்ளது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top