Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » தர்மபுரி அருகே லாரி மீது பால்வேன் மோதி விபத்து – 3 பேர் பலி

தர்மபுரி அருகே லாரி மீது பால்வேன் மோதி விபத்து – 3 பேர் பலி

தர்மபுரி அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது பால்வேன் மோதியதில் 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தர்மபுரியை அடுத்த பாளையம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பெங்களூருவில் இருந்து பல்லடத்திற்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தார். வழியில் பாளையம்புதூரில் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது ஓமலூரை அடுத்த பூம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் பால் வேன் அந்த வழியாக பால் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தது. அந்த பால்வேன் திடீரென்று சாலையில் நின்றிருந்த லாரியின் மீது மோதியது. இதில் பால்வேனை ஒட்டிச்சென்ற சண்முகம், அவரது உறவினர்கள் ராஜேந்திரன், செல்லப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல்அறிந்த தொப்பூர் காவல்துறயைினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மீது பால்வேன் மோதி 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top