Home
You Are Here: Home » News » பெண் குழந்தை உயிரோடு புதைப்பு

பெண் குழந்தை உயிரோடு புதைப்பு

புதுக்கோட்டை அருகே பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்ட பொதுமக்கள் அந்த குழந்தையை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புதுக்கோட்டை அருகே மலையப்பன் நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் பெண் சிசு ஒன்றின் அழுகுரல் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தை ஒன்று குழியில் புகதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் அந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல்அறிந்த சைல்டு லைன் சேவை அமைப்பை சேர்ந்தவர்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே பெண் சிசு பிறந்த சில மணிநேரத்தில் புதைக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top