Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » வால்பாறை தேயிலை தோட்டத்தில் புலி அட்டகாசம்

வால்பாறை தேயிலை தோட்டத்தில் புலி அட்டகாசம்

வால்பாறை தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று அட்டகாசம் செய்து அங்கிருந்த மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஏஸ்டேட் அருகே உள்ள சேடல் அணை பகுதியில் வசிப்பவர் சதாசிவம். இவரது மனைவி அருகில் உள்ள சென்னியப்பா தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார். சதாசிவம் நேற்று வழக்கம்போல தனது மாடுகளை அங்குள்ள தோட்டப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இதில் மாடு மேய்ந்த பகுதி அருகே தொழிலாளர்கள் தேயிலை பறித்துக்கொண்டிருந்தனர். அப்போது மதியம் ஒருமணியளவில் தேயிலை தோட்டத்திற்குகள் புகுந்த புலி ஒன்று அங்கு மேய்ந்துகொண்டிருந்த சதாசிவத்தின் மாடுகளில் ஒன்றை தாக்கியது. இதில் மாடுகள் சிதறி ஓடின. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு தொழிலாளர்களும் பீதியில் ஓடினர். இதற்கிடையே சில தொழிலாளர்கள் உரக்க கூச்சல் போட்டதும் புலி மாட்டை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. பலியான மாட்டின் மதிப்பு 25ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. தகவல்அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையி்ட்டனர்.

தேயிலை தோட்டத்தில் புலி புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top