Home
You Are Here: Home » News » Andhra Pradesh » சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது – மத்திய திட்டக் குழு

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது – மத்திய திட்டக் குழு

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்று மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.

தெலங்கானா தனி மாநிலமாக பிரித்த பிறகு எஞ்சியுள்ள சீமாந்திரா மாநிலத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையை மத்திய திட்டக் குழு எடுக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றபின் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியாவும் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், தற்போது சிறப்பு அந்தஸ்து அளிக்க இயலாது என்று மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் குறித்து மத்திய திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் இந்தர்ஜித் சிங் ராவுக்கு, மத்திய திட்டக் குழு அளித்துள்ள விளக்க அறிக்கையில், “தேசிய வளர்ச்சிக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை சீமாந்திரம் பூர்த்தி செய்யாததால், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்றும், எனினும், இது குறித்து மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தற்போது அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மிúஸாரம், நாகாலாந்து உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு 90 சதவீதம் வளர்ச்சி நிதியாகவும், 10 சதவீதம் கடன் தொகையாகவும் மத்திய அரசு வழங்கிவருவதுடன், 70 சதவீதம் கடன் தொகையாகவும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top