Home
You Are Here: Home » News » India » பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – சித்தராமையா

பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – சித்தராமையா

காவிரி பிரச்சனை குறி்த்து பிரதமருக்கு ஜெயலலிதாவின் எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இதில் தமது மாநிலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும்,
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்காத வரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசால் சாத்தியமில்லாதது என்றும் தெரிவித்த சித்தராமையா, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதத்தால் மாநிலத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும், இக்கடிதம் குறித்து கர்நாடக மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், காவிரி விவகாரத்தை அவ்வப்போது எழுப்புவதை தமிழக அரசு வேலையாக கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக அனைத்துக்கட்சிக் குழுவினர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்த சித்தராமையா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்பதையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top