Home
You Are Here: Home » News » Andhra Pradesh » ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் – சந்திரபாபு நாயுடு

ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் – சந்திரபாபு நாயுடு

ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் என சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்..

புதிய ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் அமைச்சர்களுக்கான இலாகாவை ஒதுக்கினார். இதன்பின் அமைச்சரவையின் முதல் கூட்டம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் விளக்கினார்.

தாம் பதவி ஏற்கும்போது கையெழுத்திட்ட கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகள், நெசவாளர்கள் கடன், குடிநீர் திட்டம், புதிய தலைநகர் உள்ளிட்ட 8 அம்ச திட்டம் குறித்து அமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தற்போது நகரங்களில் நடைமுறையில் உள்ள 4 ரூபாய்க்கு 10 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்

அதன்படி கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும் இதனை அமுல்படுத்த தனி குழு அமைக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்..

இரவோடு இரவாக புதிய தலைநகரை உருவாக்க முடியாது என்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தலைநகர் உருவாக்க 20 ஆண்டுகள் ஆகும் என்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top