Home
You Are Here: Home » News » வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ஆண்டு முழுவது‌ம் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்ற தலைமை நீதிபதி லோதாவின் கருத்து ‌கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து‌ தமிழகம் மற்று‌ம் புது‌வையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இன்று ‌ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டது‌.

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து‌ முடிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ‌பேசிய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மருத்து‌வமனைகள் போன்று‌, நீதிமன்றங்களும் 365 நாட்களும் செயல்பட வேண்டும் என்று‌ கருத்து‌ கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழகம்-புது‌வை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, இன்று ‌ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்று‌ம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது‌.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ‌கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலு‌ம், புது‌வையிலு‌ம் இன்று ஒரு‌நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top