Home
You Are Here: Home » News » உலகக் கோப்பை கால்பந்து போட்டி – தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி – தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நள்ளிரவு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் நள்ளிரவில் நடைபெற்றது. இதில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய பதினோராவது நிமிடத்தில் குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக், அடித்த பந்தை தடுக்க முயன்ற பிரேசில் வீரர் மார்சிலோ சரியான சமயத்தில் தனது காலை பின் வாங்காததால் அவரது காலில் பட்டு அவரே குரோஷியாவிற்கு கோல் அடித்து கொடுக்கும்படி அமைந்துவிட்டது. இதனால் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது. குரோஷியாவிற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணியினர் தீவிரமாக விளையாடினர்.

ஆட்டம் தொடங்கிய 29-வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மார், நீண்ட துரத்திலிருந்து அடித்த பந்து சரியாக கோல் போஸ்ட்டில் பட்டு கோலுக்குள் நுழைந்தது. இதனால் ஸ்கோர் ஒன்றுக்கு ஒன்று கணக்கில் சமன் ஆனது. முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஆட்டம் தொடங்கிய 69-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மார், கோல் போஸ்ட்டை நோக்கி விரட்டி சென்றார். அப்போது அவரை கோல் அடிக்காமல் தடுப்பதற்காக குரோஷியா வீரர் லோவ்ரன், அவரது கையை பிடித்து இழுத்ததால் லோவ்ரென்னுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன், நெய்மாருக்கு ப்ரீ கிக் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த ப்ரீ கிக்கை பயன்படுத்தி நெய்மார் மீண்டும் ஒரு கோல் அடித்தார். மீண்டும் ஆட்டம் தொடங்கிய 90-வது நிமிடத்தில் பிரேசில் வீர்ர் ஆஸ்கார், நீண்ட துரத்திலிருந்து ஒரு கோல் அடித்து ஸ்கோரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கிற்கு கொண்டு சென்றார். இறுதி வரை குரோஷியா அணியினர் கோல் அடிக்க முயன்றும், பிரேசில் வீரர்களின் அபார ஆட்டத்தால் முடியாமல் போனது. இதனால் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் போட்டியிலேயே, இரண்டு கோல் அடித்த பெருமை பிரேசில் வீரர் நெய்மாருக்கு ஏற்பட்டது. இதனால் ஆட்டநாயகனாக இரண்டு கோல் அடித்த பிரேசிலின் நெய்மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top