Home
You Are Here: Home » News » சாத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சாத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தூர் தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ். இவர் தனது இடத்திற்கு பத்திரப்பதிவு செய்வதற்காக அங்குள்ள பத்திரப்புதிவு அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிய நடராஜ், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக சாத்தூர் காவல் துறையினரிடம் நடராஜ் புகார் தெரிவித்தார், இதனையடுத்து, சாத்தூர் நகர காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதயில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top