Home
You Are Here: Home » News » கெங்கவல்லி அருகே கோவில் குட்டையில் குளிக்க சென்ற நான்கு பேர் பலி

கெங்கவல்லி அருகே கோவில் குட்டையில் குளிக்க சென்ற நான்கு பேர் பலி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கோவில் குட்டையில் குளிக்க சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கெங்கவல்லி அடுத்துள்ள ஆரகளூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்பாயிரம் அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வழிபடுவதற்காக கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த சேகர் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர்.

அப்போது சேகரின் மகன் செந்தில் அங்குள்ள குட்டையில் இறங்கிய போது சேற்றில் சிக்கி மூழ்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற சென்ற செந்தில்‌, சஞ்சய் மற்றும் விவேக் ஆகியோரும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து ஆரகளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டனர்‍.

தகவலறிந்த தலைவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்ற இடத்தில் குட்டையில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் ஆரகளூர் கிராமத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top