Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி ‌விவசாயிகள் அஞ்சலி

மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி ‌விவசாயிகள் அஞ்சலி

காவிரி டெல்டா பகுதியில் மூன்றாவது ஆண்டாக குருவை சாகுபடி பொய்த்து போனதை அடுத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி ‌விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்து வரும் கர்நாடக அரசுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மத்திய அரசு உடனடியாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் ஒன்று சேர்ந்து வரும் 17-ந்தேதி மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, மூன்றாவது ஆண்டாக குருவை சாகுபடி பொய்த்து போனதை அடுத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி ‌விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்‍.

காவிரி டெல்டா பகுதியில் குருவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். அதன்படி ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் போதிய நீர் இருப்பு அணையில் இல்லாததால், மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மத்திய அரசு உடனடியாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top