Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் அதிகரிப்பு – விபத்து ஏற்படும் அபாயம்

கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் அதிகரிப்பு – விபத்து ஏற்படும் அபாயம்

கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் அதிகரிப்பு காரண‌மாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூரில் ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணம் இல்லை என்றாலும், நிறுத்த சொல்லும் இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் நிறுத்துவதால், பொது மக்கள் அதிகளவில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர்.

மேலும் கடலூரில் ஷேர் ஆட்டோ நிறுத்துவதற்கு போதிய இடம் ஒதுக்கி தராமல் இருப்பதால், சாலையோரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது‌. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கடலூர் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனிடையே, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஷேர் ஆட்டோ நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருப்பது போன்று, கடலூர் மாவட்டத்திலும் இடம் ஒதுக்கி தருவதற்கு போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top