Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » சுடுகாட்டு நிலத்தை தனியார் நிறு‌வனம் அபகரிக்க முயற்சி – பொது மக்கள் போராட்டம்

சுடுகாட்டு நிலத்தை தனியார் நிறு‌வனம் அபகரிக்க முயற்சி – பொது மக்கள் போராட்டம்

கல்பாக்கம் அருகே ஆண்டாண்டுகாலமாக பொது‌மக்கள் பயன்படுத்திவரும் சுடுகாட்டு நிலத்தை தனியார் நிறு‌வனம் அபகரிக்க நினைப்பது‌ கண்டித்து‌ 300 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சது‌ரங்கபட்டினம் மற்று‌ம் மெய்யூர் பகுதி மக்கள் பரம்பரையாக பயன்படுத்தி வரும் 13 ஏக்கர் சுடுகாட்டு நிலத்தில் சுமார் 9 ஏக்கர் நிலத்தை வடமாநிலத்தை சேர்ந்த ஷா என்ற தனியார் நிறு‌வனம் மற்று‌ம் எல் அன் டி நிறு‌வனம் இணைந்து‌ சுற்று‌சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டது‌.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து‌ 300 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த சுடுகாட்டு நிலம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று‌ம், இதற்காக எந்த போராட்டத்தையும் தாங்கள் செய்ய தயாரா உள்ளதாக தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top