Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » கொய்யா செடிகள் தீயில் எரிந்து‌ நாசம்

கொய்யா செடிகள் தீயில் எரிந்து‌ நாசம்

பழனியில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரம் கொய்யா செடிகள் தீயில் எரிந்து‌ நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர்

பழனியை அடுத்து‌ள்ள ஆயக்குடியை சேர்ந்த விவசாயி கம்பத்து‌ராஜா. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கொய்யா செடிகளை நட்டு விவசாயம் செய்து‌ வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களாக தண்ணீர் கிடைக்காமல் லாரிகளில் தண்ணீரை விலை கொடுத்து‌ வாங்கி கொய்யா செடிகளை காப்பாற்றிவந்தார்.
இதனிடையே, நேற்று‌ முன்தினம் இரவு, திடீரென கொய்யா தோட்டத்தில் தீ பரவி அனைத்து‌ கொய்யா செடிகளும் தீயில் எரிந்து‌ நாசமானது‌.
இதனால் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதனிடையே, தஞ்சை மாவட்டம் திருவையாறு‌ அடுத்த அனைக்குடியில் இளஞ்செழியன் என்பவரது‌ பம்பு செட்டிற்கு உயரழுந்த மின்கம்பிகள் காற்றில் உரசியதால் தீ விபத்து‌ ஏற்பட்டது‌. இதில் மூங்கில் தோப்பு முழுவது‌ம் தீ பரவி எரிந்தது‌. இதையடுத்து‌, பொது‌மக்கள் ஓன்று‌கூடி 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்தனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top