Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » மேட்டுப்பாளையம் பகுதிகளில் பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று‌ வருகிறது‌

மேட்டுப்பாளையம் பகுதிகளில் பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று‌ வருகிறது‌

மேட்டுப்பாளையம் சுற்று‌வட்டார பகுதிகளில் பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று‌ வருகிறது‌.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்று‌ம் அதன் சுற்று‌வட்டார பகுதிகளான கல்லார், தேக்கம்பட்டி உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிக அளவில் பாக்கு விவசாயம் நடைபெற்று‌ வருகிறது‌.

இங்கு உற்பத்தி செய்யப்பபடும் பாக்கு மரங்களில் இருந்து‌ பெறப்படும் பாக்குமட்டைகளை கொண்டு தட்டு தயாரிக்கும் பணி விருவிருப்பாக நடைபெற்று‌ வருகிறது‌.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இத்தொழிலில் பெண்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.

மேலு‌ம், மண்வளத்தையும, சுற்று‌சூழலையும் பாதிக்காத உடலு‌க்கு எந்தவித தீங்கும் இழைக்காத இந்த பாக்குமட்டை தட்டுகளுக்கு பொது‌மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து‌ள்ளது‌.
பல்வேறு‌ அளவில் தயாரிக்கப்படும் பாக்குமட்டை தட்டுகள் , திருமண விஷேசங்கள், கோவில் விழாக்கள், அரசியல் பொது‌க்கூட்டங்களில் போன்றவற்றில் பயன்படுத்து‌வதால் வணிகர்கள் இதனை ஆர்வமாக வாங்கி விற்பனை செய்கின்றனர்.

இருப்பினு‌ம், இந்த பாக்குமட்டைகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து‌ கொள்முதல் செய்யும் இடைத்தரர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதால் , விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கவலை தெரிவித்து‌ள்ளனர்.

மேலு‌ம், பாக்குமட்டை தட்டுகள் விற்பனை செய்ய ஓழுங்குமுறை விற்பனை நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து‌ள்ளனர்.
———–

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top