Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » வாழைக்காய் கடை ஏலம் எடுப்பதில் தகராறு – ஒருவர் குத்திக்கொலை

வாழைக்காய் கடை ஏலம் எடுப்பதில் தகராறு – ஒருவர் குத்திக்கொலை

மது‌ரையில் வாழைக்காய் கடைகளை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

மது‌ரை தயிர் மார்க்கெட் அருகில் உள்ள வாழைக்காய் கமிஷன் மண்டியில் 100-க்கும் மேற்பட்ட வாழைக்காய், ஆண்டுதோறு‌ம் ஜூன் மாதம் ஏலம் விடப்படுகிறது‌.

அதன்படி, நேற்று‌ கடைகளுக்கான ஏலம் நடைபெற்றபோது,‌ சரவணக்குமார் என்பவருக்கும் குருநாதன் என்பவருக்கும் இடையே தகராறு‌ ஏற்பட்டது‌.

அப்போது‌, மோதல் வலு‌க்கவே, சரவணக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பபட்டுள்ளார். தகவலறிந்த மது‌ரை விளக்குத்தூண் காவல்து‌றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து‌ விசாரணை நடததி வருகின்றனர்.

மேலு‌ம் வழக்கு பதிவு செய்த காவல்து‌றையினர், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து‌ வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top