Home
You Are Here: Home » News » சேலம் அருகே மஞ்சள் குடோனில் தீ விபத்து

சேலம் அருகே மஞ்சள் குடோனில் தீ விபத்து

சேலம் அருகே மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை அருகே செங்கோட்டை என்பவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் உள்ளது. இந்நிலையில்‌, இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top