Home
You Are Here: Home » News » Andhra Pradesh » ஐதராபாத் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற போது விபரீதம்

ஐதராபாத் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற போது விபரீதம்

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஐதராபாத் மாணவர்கள் 24 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்‍. அவர்களில் 5 பேரின் உடலை மீட்ட மீட்புப் படையினர் மற்றவர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்‍.

ஹைதராபாதைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஒரு குழுவாக, இமாசலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் 6 மாணவிகள், 18 மாணவர்கள், மாண்டி அருகே உள்ள பியாஸ் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள அணையில் இருந்து பியாஸ் ஆற்றில் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 பேரும் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர்‌, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்‍. இதில், 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் உடல்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், இந்த சம்பவத்தை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையி்ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍.

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மற்ற மாணவர்கள் பற்றி தகவல் கிடைக்காததால் அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து‌ நடைபெற்று‌ வருகிறது‌.

இந்நிலையில்‌, ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களின் உடல்களை விரைந்து மீட்கக் கோரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்‍.

இதற்கிடையில், இந்த துயரச் சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்து‌ள்ளார்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top