Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » கமலஹாசனின் ரசிகர்கள் கொலை மிரட்டல்….

கமலஹாசனின் ரசிகர்கள் கொலை மிரட்டல்….

விஸ்வரூபம் திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் முதலில் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக திரையங்க உரிமையாளர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கே.ராஜன் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு காலையில் வந்த அவர், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் படி, கமலஹசான் தமது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச் மூலம் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து தாம் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தாக ராஜன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கமலஹாசனின் ரசிகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கே.ராஜன் தெரிவித்துள்ளார். கமலஹாசனின் தூண்டுதலின் பேரிலேயே தமக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மட்டும் இன்றி பெங்களுரில் இருந்தும் தமக்கு தொலைபேசி வாயிலாக கமல் ரசிகர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக கே.ராஜன் புகார் தெரிவித்துள்ளார். எனவே தமக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடுன் கொலை மிரட்டல்களுக்கு தூண்டுகோளாக இருக்கும் கமல் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ராஜன் வலியுறுத்தியுள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் – கமலஹசான் இடையிலான விஸ்வரூபம் படப் பிரச்சனை தற்போது காவல் நிலையம் வரை சென்றிருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top