Home
You Are Here: Home » News » மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து விட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் மேட்டூர் அணைக்கு தண்ணீரின் வரத்து அதிகமானது. நேற்று முன்தினம் விநாடிக்கு 7 ஆயிரத்து 198 கனஅடி வீதம் தண்ணீர் வந்ததால் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது அங்கு மழை குறைந்து விட்டதால் மேட்டூர் அணைக்கு வருகின்ற தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே அணைக்கு 4 ஆயிரத்து 457 கன அடி வீதம் வந்த தண்ணீர் இன்று காலையில் சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து 3 ஆயிரத்து 360 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி அனையில் மொத்தம் 44.16 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top