Home
You Are Here: Home » News » Kerala » கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – காவல் துறை தேடுதல் வேட்டை

கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – காவல் துறை தேடுதல் வேட்டை

நீலகிரி அருகே கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து, கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்துள்ள அப்பர்பவானி, கோரக்குந்தா, கிண்ணக்கொரை, முள்ளி ஆகிய பகுதிகள் தமிழக கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதிகளை சுற்றிலும் உள்ள அடர்ந்த காடுகள் கேரளா மாநிலம் மன்னார்காடு வனச்சரகத்திற்கு சொந்தமானது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளா பகுதியை சேர்ந்த சமூக விரோதிகள் இந்த காடுகளில் கஞ்சா சாகுபடி செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், மரக்கடத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டிய கேரளா வனப்பகுதியில் மர்ம நபர்கள் பதுங்கி உள்ளதாக அம்மாநில வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாகவோ இருக்ககூடும் என கேரளா வனத்துறையினர் வனப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்தனர். இதனையடுத்து, வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் கேரளா வனப்பகுதிக்குள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top